vana durga peedam

ராகுகால பூஜை தீப வழிபாட்டு முறை

ஜெய்பிரத்யங்கிரே!! ஜெய் ஜெய்பிரத்யங்கிரே !!!

வேண்டியவருக்கு எல்லாம் வேண்டியதை வரத்தை அருளும் அகிலாண்ட கோடி ப்ரமமாண்ட நாயகி ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா ஆவாள். அவளை அனைவரும் பூஜிக்க வேண்டும் என்ற எண்ணிய போது அனைவராலும் அம்பாள் விக்ரகத்தை வைத்து பூஜை செய்வது மிகக்கடினம் ஏனென்றால் அதற்கு நிறைய ஆச்சாரம் அனுஷ்டானம் வேண்டும். மக்களுக்காகவும் என்னிடம் வரும் அடியார்களுக்காக எளியமுறையில் பூஜிக்க வேண்டும் என்ற நோக்கில் பூஜித்து வேண்டய போது ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா கட்டிய வழி தன் பாத கமலம்.

தர்ம சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள், விரதங்கள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், பரிகார பூஜைகள் எல்லாம் காலம் காலமாக தொன்றுதொட்டு நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வருவதாகும். பரிகாரம் என்பது கஷ்ட நஷ்டங்கள், இடையூறுகள், தடைகளை அகற்றி நல்வழி காட்டுமாறு கடவுளிடத்தில் வேண்டிக் கொள்வதாகும்.

தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, மாலை பொழுது மற்றும் அந்தந்த தெய்வங்களுக்கு உகந்த வேளையில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதர்வண பத்ரகாளியான ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவிக்கு உகந்த ராகு கால வேளையில் தினசரி தீபம் ஏற்றி பூஜை செய்வதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளது என்பதால் பூவுலகில் வாழும் மக்கள் அனைவரும் இன்புற்று வாழ உலகில் முதல் முறையாக வேறு எவரும் கூறாத எளிய தீப வழிபாட்டு பூஜை முறையை துன்பப்படும் பக்தர்களுக்கு எடுத்துரைத்துவருகிறார் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாஸ ஸ்வாமிகள்.

தினசரி வீட்டில் இருந்தபடி ராகுகால வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும். (ராகுகால வேளைகளில் முடியாதவர்கள் காலை அல்லது மாலை 6 to 7 மணிக்கு செய்யவும்.) கொட்டையுடன் கூடிய பேரிச்சம் பழத்தில் கொட்டை நிக்கி ஒரு சிறிய தட்டில் வைத்து இரண்டு சொட்டு தேன் விடவும். ஒரு டம்ளர் தண்ணீர் வைக்கவும், எவர் சில்வர், பிளாஸ்டிக் தவிர, பித்தளை, செம்பு, வெள்ளி இவைகளில் வைக்கவும். சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணையில் இரண்டு அகல்விளக்கு தீபம் ஏற்றவும், உங்கள் வேண்டுதளை நினைத்துக்கொண்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களை கூறவும்.

1. ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை. 21முறை 2. ஓம் கணபதயே நம: 16 முறை 3. ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே! ! 108முறை 4. ஓம் மஹா ப்ரத்யங்கிராயை வித்மஹே பக்த ப்ரியாயை தீமஹி தந்நோ தேவி ப்ரஜோதயாத். 108முறை

என்று 108 முறை கூறி பிராத்தனை செய்து பேரிச்சம் பழத்தை நெய்வேத்யம் செய்யவும். ஒருநாள் இரவு பூஜை செய்த இடத்தில் நெய்வேத்யம் மற்றும் தண்ணீர் இருக்க வேண்டும் மறுநாள் ராகு காலத்திற்கு முன் அல்லது பூஜை செய்யும் நேரத்திற்கு முன் தண்ணீரையும் நெய்வேத்யம் எடுத்து சாப்பிடவும். நல்ல சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணையில், ஏற்றப்படும் தீபம் சுடர்விட்டு பிரகாசிக்கும் போது. உங்கள் விட்டில் லக்ஷ்மி காடாக்க்ஷத்தை உண்டாக்கி வாழ்க்கையில் தடைகளை அகற்றி, பில்லி சூனியத்திடம் இருந்து காக்கும். இந்த ராகுகால பூஜை செய்து பயன்பெற்றவர்கள் ஏராளம், நீங்களும் உங்கள் வீட்டில் ராகுகால பூஜை செய்து வீட்டில் நடக்கும் அற்புதங்களை உணரலாம்.

ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா பீடம், தி- நகர், செ-17. 98400 86373, 90252 33000, 044-42024647.



 



Content

Contact me