vana durga peedam

பாத கமலம்

ஜெய்பிரத்யங்கிரே!! ஜெய் ஜெய்பிரத்யங்கிரே !!!

வேண்டியவருக்கு எல்லாம் வேண்டியதை வரத்தை அருளும் அகிலாண்ட கோடி ப்ரமமாண்ட நாயகி ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா ஆவாள். அவளை அனைவரும் பூஜிக்க வேண்டும் என்ற எண்ணிய போது அனைவராலும் அம்பாள் விக்ரகத்தை வைத்து பூஜை செய்வது மிகக்கடினம் ஏனென்றால் அதற்கு நிறைய ஆச்சாரம் அனுஷ்டானம் வேண்டும். மக்களுக்காகவும் என்னிடம் வரும் அடியார்களுக்காக எளியமுறையில் பூஜிக்க வேண்டும் என்ற நோக்கில் பூஜித்து வேண்டய போது ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா கட்டிய வழி தன் பாத கமலம்.

மஹா ப்ரத்யங்கிரா தேவி ஆயிரம் சிம்ம முகம் கொண்டவள் சிங்கம் இன்றி அம்பாள் இல்லை, சிம்ம வாகினி சிங்கத்தில் அமர்து இருப்பவள், பாத கமலம், பீடத்தின் மீது சிங்கமும், சிங்கத்திற்கும் முன் தாமரை பூவின் மேல் அம்பாளின் பதமும் கொண்ட வடிவத்தில், ஆறு வகையான தெய்வ வசிய மூலிகை மற்றும் ஸ்ரீ மஹா சண்டி, ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா யாக ரக்ஷை உள்ளடக்கபட்டு தந்திர சாஸ்திர முறைப்படி அம்பாளின் பாதமாக பாத கமலம் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நம் எந்த ஒரு கோவிலுக்கு சென்றாலும் தெய்வத்தை காணும் பொது பாதத்தில் இருந்து தான் தரிசிக்க வேண்டும் அப்படி தரிசிக்கும் முறைதான் நல்லது,

அது போல் ரிஷிகள் மகான்கள் குருமார்கள் நம் பாதபூஜை செய்வதும் மிகவும் உயர்வான விஷியம் ஏனென்றால் நமக்கு இருக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் மகான்கள், குருமார்களுக்கு பாதபூஜை செய்யும் பொது தீர்வு ஏற்படுகிறது, உதரணமாக நம் எதிரி நம்மிடம் வந்து காலில் விழுந்து வணங்கினால் நம் அவனை மன்னித்து விடுகிறோம்.

பெரியவர்களின் காலில் விழுந்து வணங்குவதன் முலம் நமக்கு ஆசிர்வாதம் கிடைக்க பெறுகிறோம். அதை போல் நமது பிரச்சனைகள் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் பாத கமலத்தை அம்பாளின் நினைத்து சமர்ப்பித்து பூஜை செய்துவந்தாள் வேண்டியதை அருள்வாள். ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா நவாவர்னை பூஜையில் நாம் கவனிக்க வேண்டியது "ஸ்ரீ பாதுகாம் பூஜயாமி தர்பயாமி நம” அவளது பாதத்தை நமச்கரிகிறோம் என்று அர்த்தம் ஆகிறது நமக்கு எது வேண்டும் எப்போது வேண்டும் என்று அறிந்து அளிக்க வல்லவள் ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா என்பதை உணர்ந்துஅறிந்து பாத கமலத்தை இவ்வுலகிற்கு அளித்து வருகிறார் ப்ரத்யங்கிரா தாச ஸ்வாமிகள்.  



Content

Contact me