vana durga peedam

கர்மவினை

ஜெய்பிரத்யங்கிரே!! ஜெய் ஜெய்பிரத்யங்கிரே !!!

எந்த மதத்தினராக இருந்தாலும், எல்லோருக்கும் சில பொதுவான கேள்விகள் இருக்கும். “ஏன்? எதற்கு? எதனால் நடக்கிறது?” என்பதற்கு பதில் இருக்கிறது. அந்த பதில் தான் “கர்மவினை”..

மனிதர்களின் வாழ்க்கையே அவரவர்களின் கர்ம வினைகளுக்கேற்ப அமைகிறது. கர்ம வினை என்பது பாவ, புண்ணியங்களுக்கு கிடைக்கும் பலன்

நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லையே ஏன் எனக்கு இவ்வளவு துன்பம்? கடவுள் ஏன் என்னை இப்படி தண்டிக்கிறார் என்றும், அவன் அவ்வளவு அநியாயம் பண்ணுறான் ஆனால், சுகமாக இருக்கிறானே! எப்படி?இந்தக் கேள்விகள் இல்லாத மனிதர் இந்த உலகிலேயே இருக்க முடியாது.

இந்தக் கேள்விக்கான பதில் தான் “கர்மவினை / பாவ புண்ணியம்”. இது பற்றி தற்போது பார்ப்போம்.

ஒரு செயல் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறதா அல்லது தீமையை தருகிறதா என்பதை பொறுத்து அதன் பலனை நாம் அனுபவிப்போம். நமது அனைத்து செயல்களும் சுற்றுப்புற சூழல்,தாவரம், விலங்குகள்மற்றும்மனிதர்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கிறது. அந்த பாதிப்பு நன்மையாக இருந்தால் நமக்கு புண்ணியமும் தீமையாக இருந்தால் நமக்கு பாவமும் ஏற்படும்

ஒரு அயோக்கியன் சுகமாக இருக்கிறானே என்று கேள்வி கேட்பதில் அர்த்தம் இல்லை. அவன் சுகமாக இருப்பதற்கு காரணம் அவன் செய்த புண்ணியம். அவன் செய்யும் கெட்ட காரியங்களுக்கு நிச்சயம் அவன் தண்டனை அனுபவிப்பான். அதே போல் நான் எப்பொழுதும் எல்லோருக்கும் நன்மை மட்டும் தான் செய்கிறேன், கடவுள் ஏன் என்னை இப்படி தண்டிக்கிறார் என்ற கேள்வியும் தவறு. பாவ புண்ணியங்களின் பலனை தனித்தனியாக அவரவருக்கு சேரவைப்பதில் இறைவன் எந்த தவறும் செய்வதில்லை.

ஒருவர் வாழ்கையில் துன்பத்தை அனுபவித்துக்கொண்டு இருந்தால், அது அவரது முற்பிறவியின் வினைபயன் அல்லது அவரது முன்னோர்களின் வினைப்பயனாகத் தான் இருக்க வேண்டும். இதற்காக நீங்கள் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். பழைய பின்னனிகளை தேடிப் பார்க்க வேண்டும். நம் முன்னோர்கள் செய்த தவறுகள் என்ன என்று தேடிப் பார்த்தால் ஒருவேளை உங்களுக்கு இதற்கு விடை கிடைக்கலாம்.. நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் பாவ புண்ணியங்கள் கலந்தே இருக்கும். பாவ காரியங்கள் மட்டுமே செய்து நல்ல செயல்கள் எதுவும் செய்யாத மனிதனோ அல்லது பாவத்தை முழுதாக தவிர்த்து புண்ணியகாரியங்கள் மட்டுமே செய்யும் மனிதனோ உலகில் கிடையாது

ஒருவன்நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் அதற்குண்டான பலனை அவனும், அவனுடைய சந்ததினர் பெற்றே ஆக வேண்டும்என்பது நீதி.இந்தப் பிறவியில் இல்லைஎன்றாலும் அடுத்த / அதற்கடுத்த பிறவியில் அதை அவன் அடைந்தே தீர வேண்டும் ஆனால் தாக்கத்தின் அளவைக் குறைக்க முடியும்.

உதரண மாகபாரத போரில் கர்ணனை அனைவரும் தாக்கியும் அவர் சாக மாட்டார் காரணம், அவர் செய்த தர்மங்கள் / புண்ணியம். அவரை அழிக்க வேண்டும் என்றால், அவரிடம் உள்ள புண்ணியம் அனைத்தும் தீர வேண்டும், கிருஷ்ணர் அந்தணர் வேடம் பூண்டு கர்ணனிடம் இருக்கும் புண்ணியத்தை யாசகம் கேட்பார். தன்னுடைய புண்ணியங்களை கர்ணன் தாரை வார்த்துக்கொடுத்ததும் இறந்து விடுவார். இந்த உதரணமாக ஓரளவு உங்களுக்கு கர்மவினை / பாவபுண்ணியம் பற்றி புரிந்து கொள்ளஉதவும்

கர்மவினை ஒருவன் செய்த தவறுக்கு எப்படி துன்பத்தை கொடுக்கிறதோ அதே போல நீங்கள் செய்யும் நல்லதுக்கும் உங்களுக்கு அது நன்மை செய்தே ஆக வேண்டும்.

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை “தினை வினைத்தவன் தினை அறுப்பான்” என்பதும், தீதும் நன்றும் பிறர் தர வாரா கணியன்பூங்குன்றனார் கூறியது போல நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை அவர்களாகவே தேடிகொள்வது.

பாவமும் புண்ணியமும் ஒன்றை ஒன்று நீக்கிவிடாது. நாலு பேருக்கு நல்லது செய்வதற்காக அதர்மமான செயலில் ஈடுபட்டால் அது சரியாகிவிடாது. செய்த தவறுக்கு தண்டனையும் அடுத்தவர்களுக்கு செய்த உதவிக்கு உண்டான நற்பலனும் தனித்தனியே நம்மை வந்து சேரும். நீங்கள் கடந்த பிறவியில் நிறைய பாவம் செய்ததால், இந்தப் பிறவியில் நீங்கள் பல சோதனைகளை சந்திக்க வேண்டும் அதில் இருந்து தப்பிக்கவே முடியாது ஆனால், நீங்கள் நல்ல விசயங்கள் பல செய்வதன் மூலம் இதன் கடுமையான தாக்கத்தில் இருந்து கொஞ்சம் இளைபாறுதல் பெறலாம்.

உதரணமாக, கடும் வெயிலில் நடந்து செல்லும் போது இளைபாறுதலக்கு மரத்தடி நிழல் கிடைபதுபோல், நாம் நடந்து செல்லும் போது நண்பர்கள் யாராவது லிப்ட் கொடுபது போல், தாக்கத்தை குறைத்து கொள்ளலாம்.

மனிதனுடையவாழ்நாளில்மூன்றுவகையான கர்மவினைகளை பெற்றுஅனுபவிக்கிறான்அவை 1.சஞ்சிதகர்மம் , 2.பிராப்தகர்மம் , 3.ஆகாமியகர்மம்ஆகும் . அவைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம் .

சஞ்சித கர்மா என்பது நம் கருஉருவாகும் போதே உடன் உருவாவது, சஞ்சிதஎன்றால், ஒருபை அல்லது ஒருமூட்டை. இந்த சஞ்சித கர்மா ஒரு மூட்டையாக உள்ளது முன் ஜென்மங்களில் நாம் செய்த பாவபுண்ணியமாகும் மற்றும் முன்னோர்கள் செய்த பவபுணியங்களின் பலனால் நமக்கு வரும் வினைபதிவு ஆகும் . இதில் நன்மையும் இருக்கும் , தீமையும் இருக்கும். இதில் வரும் நன்மையும், தீமையும் நாம் அனுபவித்தே தீரவேண்டும் இதில் யாருமக்கும் விதிவிலக்கு இல்லை. இதன் பலனை ஒரே பிறவியில் அனுபவிப்பதில்லை; ஒவ்வொரு பிறவியிலும் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்க வேண்டி உள்ள வினைப்பயனே சஞ்சித கர்மாஆகும்

பிராப்த கர்மா என்பது நாம் இந்த பிறவியில் உடலெடுத்து வாழும்காலத்தில் சஞ்சித கர்மாவின் ஒருபகுதியை இந்தப்பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே 'பிராரப்தக்கர்மா ஒரு குறிப்பிட்ட பிறவியில், அந்தப் பிறவிக்கு ஏற்ற வினைப்பயன்கள் மட்டும் செயல்படுகின்றன். அவ்வாறு ஒரு பிறவியில் செயல்படத் தொடங்கியுள்ள வினைப்பயனே பிராரப்தக்கர்மா ஆகும்

ஆகாமியகர்மா என்பது நாம் பிறந்தது முதல் இந்த நிமிடம் வரை நாம் செய்த கர்மவினை.இந்த பிறவியில் நாம் வாழும் காலத்தில் நம் ஆசைகளால் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் வருவது, இவற்றின் பலனை பெரும்பாலும் நாம் அவ்வப்போது அனுபவித்து விடுவோம். ஆயினும் ஒரு சிறுபகுதி நிச்சயம் எஞ்சி இருக்கும். இறக்கும்பொழுது எஞ்சியுள்ள ஆகாமி கர்ம பலன்கள், நாம் பலமுன் பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள சஞ்சித கர்மத்துடன் சேர்ந்து விடும்

இவ்விதமாக மூன்று வகையான கர்மாக்கள் நம்மை சூழ்ந்துள்ளன.

இந்த கர்மவினைகளில் இருந்து யாரும் தப்பிவிட இயலாது, அனைவரும் கர்மவினையில் சிக்கி உழன்றாகவேண்டியது தான், நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், கஷ்டங்கள் நஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், முடக்கங்கள், விபத்துகள், நோய்கள், திருமணம் இன்மை, சந்ததி விருத்தி இன்மை துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் நான் மேலே குறிப்பிட்ட கர்மவினைகளின் சாராம்சம் ஆகும்.

இந்த கர்மவினைகளை களைய நம்மில் பலர் பல ஆலயங்களுக்கு சென்றும், பலவிதமான பரிகாரங்களை மேற்கொண்டும் கைப்பணம் செலவானது தான் மிச்சம், நம் கர்மவினைப்பலன்கள் மட்டும் மாறியபாடில்லை, நம் வேதனை தீர்ந்தபாடில்லை. அப்படி யென்றால் நம் கர்மவினைகளை தீர்க்கவழியே இல்லையா ?

ஏன் இல்லை. கர்மவினைகளை நீக்க பரிகாரங்கள் உள்ளது.  



Content

Contact me